எதிரணி தோற்க மாந்திரீக சடங்கு செய்த ஐபிஎல் அணி உரிமையாளர் - ரகசியத்தை உடைத்த லலித் மோடி
ஐபிஎல் அணி உரிமையாளர் எதிரணி வீரர்களின் அறையில் மாந்திரீகம் செய்துள்ளதாக லலித் மோடி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CSK அணிக்கு எதிராக மாந்திரீகம்?
ஐபிஎல் தொடரில், கடந்த மார்ச் 18 ஆம் திகதி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணிகள் மோதியது.

இதில், CSK அணி துடுப்பாட்டம் ஆடும் போது, மைதானத்தில் உள்ள SRH ரசிகர் ஒருவர் எலுமிச்சை பழத்தை நெற்றிக்கு நேர் வைத்து கண்ணை மூடி ஏதோ சொல்லி மைதானத்தி நோக்கி காட்டுவார்.
அடுத்த பந்திலே களத்தில் இருந்த சிவம் துபே ஆட்டமிழப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
Black magic live 😭 pic.twitter.com/rzJYd6kjti
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 19, 2026
பலரும், அவர் முதல் பந்தில் இருந்தே இது போன்று செய்து வருவதாகவும், அதில் ஆட்டமிழந்த வீடியோவை மட்டும் வெளியிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், ரசிகர்களின் இது போன்ற மாந்திரீக செயல் வீரர்களை பாதிப்படைய வைப்பதாக CSK அணி BCCI-யிடம் புகார் அளித்தது போன்ற போலியான கடிதம் ஒன்று வைரலானது.
லலித் மோடி விளக்கம்
இந்நிலையில், இது குறித்து ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முன்னதாக ஐபிஎல் அணி உரிமையாளர் ஒருவரே எதிரணி வீரர்களின் உடைமாற்று அறையில் இது போன்ற செயல்களை செய்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் இது குறித்து உறுதியான ஆதாரங்களுடன் எனக்கு தகவல் வந்தது.
I remember I posted some team owner doing this to the opposing team. By doing exactly this themselves in opposing team dressing room. I even alerted the opposing team owners about this way back in 2011 season - when it happened and I got an alert with concrete proof. I will… https://t.co/jxmv84Nkwv
— Lalit Kumar Modi (@LalitKModi) April 19, 2026
அப்போதே நான் அணி உரிமையாளர்களிடம் இது குறித்து எச்சரிக்கை செய்தேன். இந்த செயல்கள் யாரால், எப்படி நடத்தப்பட்டன என்பதை திரைப்படம் / தொலைக்காட்சி தொடரில் நான் வெளிப்படுத்துவேன்" என தெரிவித்துள்ளார்.
அணி உரிமையாளரே இது போன்ற செய்துள்ளதாக கூறிய நிலையில், யார் அவர்?, எந்த அணிக்கு செய்தார் என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |