மீண்டும் சூதாட்ட சர்ச்சையில் CSK; ஒரு போட்டிக்கு ரூ.60 லட்சம்
csk named in fixing sting operation ex ranchi player claims for 3 crores: முன்னாள் ரஞ்சி வீரர் ரகசிய ஸ்டிங் ஆபரேஷனில், CSK அணியின் ஆடும் 11 வீரர்களின் விவரங்களை சூதாட்ட புக்கிகளுக்கு முன்கூட்டியே கசியவிட்டு, ரூ.3 கோடி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
சூதாட்ட சர்ச்சையில் அடிபட்டுள்ள சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் பிரபல அணிகளின் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயர் மீண்டும் சூதாட்ட சர்ச்சையில் அடிபட்டுள்ளது.
முன்னதாக 2013 ஆம் ஆண்டில் குருநாத் மெய்யப்பன் மீதான சூதாட்டப் புகாரைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.
தற்போது பிரபல புலனாய்வு ஊடகமான தெஹல்கா நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேஷனில், CSK அணியில் ஆடும் 11 வீரர்களின் விவரங்களை சூதாட்ட புக்கிகளுக்கு முன்கூட்டியே கசியவிட்டு ரூ.3 கோடி பணம் பெற்றதாக முன்னாள் ரஞ்சி வீரர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னாள் ரஞ்சி வீரரான ரச்சித் பாட்டியா, நாகாலாந்து அணிக்காக 6 முதல் தரப் போட்டிகளிலும், இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
வழக்காமாக நாணய சுழற்சிகளுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பே, ஆடும் 11 வீரர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் போட்டி தொடங்குவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே ஆடும் 11 வீரர்களின் விவரங்களை லண்டனில் உள்ள பந்தயத் தரகர்களுக்கு ஸ்னாப்சாட் மூலம் அனுப்பியுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒரு போட்டிக்கு ரூ.60 லட்சம்
அந்தத் தகவலுக்காக ஒரு போட்டிக்கு ரூ.60 லட்சம் வீதம், 5 போட்டிகளில் மொத்தம் ரூ.3 கோடி தனக்கு வழங்கப்பட்டதாக ரச்சித் பாட்டியா தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த தகவல்களை வைத்து தானும் பந்தயம் கட்டி தனிப்பட்ட முறையில் லாபம் ஈட்டியதாக தெரிவித்துள்ளார்.
இதே போல், 90 சதவீத உத்தரவாதத்துடன் கூடிய ஸ்பாட்-ஃபிக்சிங்கிற்கு ஒரு போட்டிக்கு ரூ.1 கோடி கட்டணமாக விதித்துள்ளார்.
அவருக்கு தகவல் அளித்த CSK வீரர், 2026 ஆம் ஆண்டு காயம் காரணமாக தேர்வு செய்யப்படாததால் அவரின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் தனது கவனத்தை டெல்லி பிரிமியர் லீக் பக்கம் திருப்பி அங்கு, ரகசிய பந்தயத் தரகருக்காக ஆட்டங்களைச் சரிசெய்வதற்கு, ரன் அவுட்கள் மற்றும் மெதுவாக பேட் செய்வது போன்றவற்றை பாட்டியா வழிமுறைகளாகக் குறிப்பிட்டார்.
அதில், போட்டிகளுக்கு முன்பு பாட்டியா வழங்கிய ஆடும் 11 வீரர்களின் விவரங்களை, நாணய சுழற்சிக்கு பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அணிகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில், ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெற்ற சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் மற்றும் நார்த் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த DPL போட்டியில் ஒப்பீடு பொருந்தியதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த அறிக்கையில், தகவல் வழங்கிய CSK வீரரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ரச்சித் பாட்டியாவுக்கு அந்த வீரருக்கு 18 வயதிலிருந்தே தெரியும் என்றும், அவர் டெல்லியைச் சேர்ந்த 23 வயது ரஞ்சி கிரிக்கெட் வீரர் என்றும் விவரித்துள்ளது.