அரசியலில் இணைய உள்ள கிரிக்கெட் வீரர் முகமது ஷமி? மத்திய அமைச்சருடன் சந்திப்பு
mohammed shami meet rjd chief jayant chaudhary sparks political entry: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, மத்திய அமைச்சருடனான சந்திப்புக்கு பின்னர் அரசியலில் இணைய உள்ளாரா என விவாதம் எழுந்துள்ளது.
அரசியலில் இணைய உள்ள முகமது ஷமி?
2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 2025 மார்ச்க்கு எதிரான நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசியாக அணியில் இடம் பிடித்தார்.

ராஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சமீபத்தில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் அவர் பெயர் இடம்பெறாதது குறித்து முன்னாள் அணித்தலைவரான திலீப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணியில் ஷமி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் அரசியலில் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளாரா என விவாதம் எழுந்துள்ளது.
சமீபத்தில், முகமது ஷமி, மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் தேசியத் தலைவரான ஜெயந்த் சௌத்ரியை சந்தித்து பேசியுள்ளார்.

அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள சூழலில், முகமது ஷமியின் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
முகமது ஷமியின் சொந்த ஊரான அம்ரோகா தொகுதியை, சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த தொகுதியில் முகமது ஷமியை களமிறக்கி, அந்த தொகுதியை கைப்பற்ற RLD திட்டமிட்டு வருகிறது.
ஆனால் இந்த சந்திப்பு குறித்து முகமது ஷமியின் தரப்பிலோ, ஜெயந்த் சௌத்ரி தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.