தெறித்த ஸ்டெம்புகள்! ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்... சி.எஸ்.கே வீரர் தீக்ஷனா மாயாஜால பந்துவீச்சு வீடியோ
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இலங்கையின் மஹீஷ் தீக்ஷனா ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிய நிலையில் பெங்களூர் அணி 13 ரன்களில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தோற்றாலும் சென்னை அணியின் சில வீரர்களின் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது.
அதிலும் மஹிஷ் தீக்ஷனா ஒரே ஓவரில் மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆட்டத்தின் 19வது ஓவரில் லொம்ரோர், வனிந்து ஹசரங்கா, ஷபாஸ் அகமது ஆகியோரது விக்கெட்களை அவர் வீழ்த்தினார்.
அந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே தீக்ஷனா கொடுத்தார்.