விவாகரத்தை அறிவித்த CSK வீரர் - முடிவுக்கு வந்த 4 ஆண்டு காதல் திருமணம்

Chennai Super Kings Divorce
By Karthikraja Feb 21, 2026 05:30 AM GMT
Report

CSK வீரர் ராகுல் சஹர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளார்.

ராகுல் சஹர்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சஹர்(rahul chahar), இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2021 டி20 உலகக்கிண்ணத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். 

விவாகரத்தை அறிவித்த CSK வீரர் - முடிவுக்கு வந்த 4 ஆண்டு காதல் திருமணம் | Csk Player Rahul Chahar Announced Divorce

ஐபிஎல் தொடர்களில் முன்னதாக புனே, மும்பை, பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடிய இவர், 2026 ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாட உள்ளார். ஐபிஎல் மினி ஏலத்தில் CSK அணி அவரை ரூ.5.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. 

rahul chahar csk

இவர், நீண்ட நாட்களாக ஆடை வடிவமைப்பாளரான இஷானி ஜோஹரை(ishani johar) காதலித்து வந்தார். 

rahul chahar wife

2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கடந்த 9 மார்ச் 2022 அன்று கோவாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

ரொனால்டோ பற்றி மோசமாக பேச பணம் கொடுத்தார்கள் - முன்னாள் காதலி

ரொனால்டோ பற்றி மோசமாக பேச பணம் கொடுத்தார்கள் - முன்னாள் காதலி

இந்நிலையில் தனது 4 ஆண்டுகால காதல் திருமணம் விவாகரத்தில் முடிவதாக ராகுல் சஹர் அறிவித்துள்ளார்.

விவாகரத்து

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் யாரென்றே எனக்குத் தெரியாத வயதில், எனது மதிப்பு என்னவென்று உணராத நிலையில், நான் கட்டியெழுப்ப விரும்பிய வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே நான் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேன். 

அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகள் நான் சற்றும் எதிர்பாராத பல பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தன. கடந்த 15 மாதங்களாக நீதிமன்றங்களில் அலைந்தது எனக்குப் பொறுமையையும், மன உறுதியையும் கற்றுக் கொடுத்துள்ளது.

இன்று என் வாழ்க்கையின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது.இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை. மிகவும் தெளிவாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

சில உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிப்பதில்லை, அவை நம்மை விழிப்படையச் செய்யவும், சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கவுமே வருகின்றன.இப்போது நான் சுய விழிப்புடனும், எனக்குத் தேவையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் உறுதியுடனும் முன்னேறிச் செல்கிறேன்.

இது ஒரு முடிவல்ல, இது ஒரு விடுதலை. எந்தக் கசப்புணர்வையும் நான் சுமந்து செல்லவில்லை. பாடங்களையும், கண்ணியத்தையும், மீண்டும் தொடங்கும் துணிச்சலையும் மட்டுமே சுமந்து செல்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US