கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் நெகிழ்ச்சி செயல்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிக்சை பெறுவோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆதரவுகரம் நீட்டியுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுவதால் அதை கருத்தில் கொண்டு 450 ஆக்சிஜன் செறிவூட்டி எந்திரங்களை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. பல மாநிலங்கள் கடுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளன.
தமிழகத்திலும் கொரோனா பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில், ஆபத்து கட்டத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்காக 450 ஆக்சிஜன் செறிவூட்டி எந்திரங்களை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் சார்பில் அதன் இயக்குனர் ஆர்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், இந்தியா சிமெண்ட்ஸ் அதிகாரி பி.எஸ்.ராஜன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆக்சிஜன் செறிவூட்டியை வழங்கினர்.