CSK அணியில் இணைந்த இளம் புயல்: ராமகிருஷ்ணா கோஷூக்கு மாற்று வீரர் யார்?
2026ம் ஆண்டு சிஎஸ்கே அணியில் புதிய வீரராக மெக்னில் நரோனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராமகிருஷ்ணா கோஷ் விலகல்
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளரான ராமகிருஷ்ண கோஷ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2026ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய ராமகிருஷ்ண கோஷ் வெறும் 24 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.
மேலும் போட்டியின் மிக முக்கிய விக்கெட்டான சூர்யகுமார் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். ஆனால் துர்திஷ்டவசமாக ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து ராமகிருஷ்ணா கோஷ் விலகினார்.
புதிய வீரராக மெக்னில் நரோனா தேர்வு
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணி ராமகிருஷ்ணா கோஷூக்கு மாற்றாக கர்நாடக வீரர் மெக்னில் நரோனா-வை அணியில் சேர்த்துள்ளது.

ஆல் ரவுண்டர் வீரரான மெக்னில் நரோனா சி.கே நாயுடு தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்து நமன் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியில் இதுவரை நாதன் எல்லீஸ், கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே ஆகியோர் காயத்தினால் தொடரில் இருந்து விலகியுள்ளனர். எம்.எஸ் தோனி எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |