சென்னை சூப்பர் கிங்ஸ் சரவெடி ஆட்டம்! குஜராத்திற்கு 231 ரன் இலக்கு
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 230 ஓட்டங்கள் குவித்துள்ளது.
ருத்ர தாண்டவம்
அகமதாபாத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாடியது.
ஆயுஷ் மாத்ரே அதிரடியாக 17 பந்துகளில் 34 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரி) விளாசி வெளியேற, உர்வில் படேல் தனது பங்கிற்கு 19 பந்துகளில் 37 ஓட்டங்கள் அடித்து நொறுக்கினார்.
ஷிவம் தூபேவை 17 ஓட்டங்கள் ரஷீத் கான் வெளியேற்ற, அரைசதம் விளாசிய டெவோன் கான்வே 35 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து வந்த டெவால்ட் பிரேவிஸ் ருத்ர தாண்டவமாடினார். இதன்மூலம் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
பிரேவிஸ் சரவெடி
ரவீந்திர ஜடேஜா ஓரளவு ஓட்டங்கள் எடுக்க (21), சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் குவித்துள்ளது.
சரவெடியாய் வெடித்த டெவால்ட் பிரேவிஸ் (Dewald Brevis) 23 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் விளாசினார்.
பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ரஷீத் கான் மற்றும் ஷாரூக் கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |