சிஎஸ்கே அணிக்கு ஹாட்ரிக் தோல்வி! சேப்பாக்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி
நடப்பு ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு தொடர்ச்சியான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இன்று, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிக்கு எதிராக 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.
இதன்மூலம், நடப்பு சீசனில் சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி அபார பேட்டிங்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் 55 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
மறுமுனையில் அவருடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் குவித்தது.
சொதப்பிய சென்னை அணி
184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஜோடி சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ரச்சின் ரவீந்திரா 3 ஓட்டங்களிலும், நம்பிக்கை அளித்த ருதுராஜ் கெய்க்வாட் 5 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கான்வேயும் 13 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால், பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே சென்னை அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் விஜய் சங்கர் நிதானமாக ஆடி அரைசதம் (50) எட்டினார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni) களமிறங்கி தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இந்த சீசனில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |