சென்னை அணி பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை: CSK நிர்வாகம் மறுப்பு
Csk Deny Dhoni Bid to Buy a Stake: CSK அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை என்று சென்னை நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
சென்னை அணி பங்குகளை வாங்க முயற்சித்த தோனி
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
2008ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக தோனி விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனிக்காக மட்டுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிஎஸ்கே அணியில் தோனி பங்குகளை வாங்க முயற்சித்ததாகவும், இந்த விவகாரத்தில் அணி நிர்வாகத்துடனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் அவர்களுடனும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

தோனி முதலில் 25% பங்குகளை வாங்க விரும்பியதாகவும். ஆனால் சிஎஸ்கே உரிமையாளர்கள் அவருக்கு 3% பங்குகளை வழங்க முன் வந்ததாகவும். அதன் பின்னர் தோனி 18% பங்குகளை கேட்ட நிலையில், அதிகபட்சமாக 5% வரை வழங்க முடியும் என்று உரிமையாளர் கூறி விட்டதாக தகவல் வெளியானது.
இதன் காரணமாக தோனி மற்றும் அணி உரிமையாளர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி அணியில் தொடர்வாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னை அணி பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை
இந்நிலையில் தோனி சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க முயன்றதாக கூறப்படும் தகவலை அணி நிர்வாகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக தோனியுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், தோனியும் இது குறித்து எங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று CSK-வின உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் என்.சீனிவாசனிடம் தோனி இது தொடர்பாக பேசியது குறித்த எந்த தகவலும் எங்களிடம் இல்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
ஏற்கனவே சென்னையின் பங்குகளில் தோனி சிறிய அளவு தன் வசம் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |