தல ரெடி! கர்ஜிக்கப்போறோம் சூப்பர்ஃபேன்ஸ் - CSK ட்வீட்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு தயாராகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்வீட் செய்துள்ளது.
CSK - RCB மோதல்
தோனி மற்றும் கோலி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டியான CSK vs RCB இன்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி 4வது அணியாக பிளேஆஃப் சுற்றுக்குள் நுழையும்.
ஒருவேளை மழை பெய்து போட்டி ரத்தாகும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15களை பெற்று அடுத்த சுற்றுக்கு செல்லும்.
Blade Check ?✅
— Chennai Super Kings (@ChennaiIPL) May 18, 2024
Thala Ready! ??#RCBvCSK #WhistlePodu ?? @msdhoni pic.twitter.com/xFLjQgMWTm
வீரர்கள் தயார்
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட்டு வருகிறது.
ஒரு பதிவில் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து பிளேடு சரிபார்க்கப்பட்டது, தல ரெடி எனவும், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவையும் பகிர்ந்துள்ளது.
மேலும் ''வீரர்கள் தயார்: ஆட்டம் ஆரம்பம்..சூப்பர்ஃபேன்ஸ் விசில் போடுங்கள்'' என ஒட்டு டீவீட்டும் செய்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Players Ready: Game Starts ??
— Chennai Super Kings (@ChennaiIPL) May 18, 2024
Let the whistles begin, Superfans! ?#RCBvCSK #WhistlePodu ?? pic.twitter.com/cGZeJJOJbr
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |