அமெரிக்கா தாக்கினால் உயிரை கொடுக்கவும் தயார்: டிரம்புக்கு கியூபா விடுத்த எச்சரிக்கை
கியூபாவுக்கு எதிரான திட்டங்களை அமெரிக்கா முன்னெடுத்தால் மிகப்பெரிய சண்டை வெடிக்கும் என்று அந்நாட்டு அதிபர் எச்சரித்துள்ளார்.
தலைதூக்கும் மோதல்
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவு அவ்வளவு நட்பாக இல்லாத நிலையில், சமீபத்தில் வெனிசுலா நாட்டின் அதிபரை அமெரிக்கா சிறைப்பிடித்தது.
அதிலிருந்து வெனிசுலாவிருந்து கியூபாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயானது நிறுத்தப்பட்டது.
இதனால் கியூபா மிகப்பெரிய எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்காவும் கியூபாவும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக முன்வந்தது, ஆனால் அமெரிக்க பேச்சுவார்த்தை தொடர்பான அம்சங்கள் குறித்து எந்தவொரு விவரங்களையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது.

மிகப்பெரிய சண்டை வெடிக்கும்
இந்நிலையில் அமெரிக்கா கியூபா மீது தாக்குதல் நடத்தினால் அது மிகப்பெரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக NBC செய்திக்கு அளித்த தகவலில், அமெரிக்கா கியூபா மீது தாக்குதல் நடத்தவோ, அதன் ஜனாதிபதியை கடத்தவோ எந்தவொரு நியாப்படுத்த கூடிய முகாந்திரமும் இல்லை என நினைக்கிறேன்.
ஆனால் ஒருவேளை அப்படி நடந்தால், கியூபா சண்டைக்கு தயாராக இருப்பதாகவும், நாங்கள் உயிரை கொடுத்து கூட தாய் மண்ணை காப்போம் என்றும் தாய் நிலத்திற்காக உயிர் விடுவதே உண்மையான வாழ்வு என கியூபா தேசிய கீதம் சொல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |