பரபரப்பான போட்டியில் நின்று ஆடிய கம்மின்ஸ்..பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் ஆல்அவுட்
மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 203 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 44 ஓட்டங்களும், நசீம் ஷா 40 ஓட்டங்களும் எடுத்தனர். ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இங்கிலிஸ் 49
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்லிஸ் கூட்டணி 85 ஓட்டங்கள் குவித்தது.
ஸ்மித் 44 (46) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹாரிஸ் ராஃப் ஓவரில் அவுட் ஆனார். இங்கிலிஸ் 49 (42) ஓட்டங்களில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் அவுஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்தது.
கம்மின்ஸ் நங்கூர ஆட்டம்
அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 185 ஆக இருந்தபோது கம்மின்ஸ் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 33.3 ஓவரில் 204 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேட் கம்மின்ஸ் (Pat Cummins) 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளும், ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |