தயிரை இப்படி சாப்பிட்டு பாருங்கள்! எந்த நோயும் கிட்ட கூட வராது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி! நோயில்லா வாழ்வு வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும்.
அதற்கு ஒரு சுலபமான எளிய வழி தயிர். சில உணவுப் பொருட்களை தயிரில் கலந்து சாப்பிட்டால் உடல்நலத்தில் பல அற்புத மாற்றங்கள் ஏற்படுவதை உணரலாம்.
உலர் பழங்கள்
உடல் மெலிந்தவர்கள், எடையை அதிகரிக்க விரும்பினால், தினசரி ஒரு கிண்ணம் தயிரில் சர்க்கரை மற்றும் உலர் பழங்களை கலந்து சாப்பிட வேண்டும். இது எடையை கூட்டும்.
சோம்பு
ஒரு கிண்ணம் தயிரில் 1/2 தேக்கரண்டி சோம்பை கலந்து சாப்பிடுங்கள். இதை கடைபிடித்தால் போதும், ஆழ்ந்த தூக்கம் வரும். தூக்கம் வராமல் சிரமப்படுபவர்களுக்கு இது அதி மருந்து.
வறுத்த சீரகம்
செரிமான பிரச்சினைகள் இருப்பவர்கள், ஒரு கிண்ணம் தயிரில் கருப்பு உப்பு மற்றும் 2-3 சிட்டிகை வறுத்த சீரகத்தை கலந்து சாப்பிட்டு வரலாம்.
ஏலக்காய்
பல்வேறு உடல் நல்ப்பிரச்சனைகளுக்கு காரணமாக உடல் உஷ்ணம் உள்ளது. தயிரை துணியில் வடிகட்டி அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்த்து குளிர வைத்தால் ஸ்ரீகண்ட் இனிப்பு தயார். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
Shutterstock