மார்ச் 26 முதல் முழு ஊரடங்கு அமுல்! மகாராஷ்டிரா அரசு முக்கிய அறிவிப்பு
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்துப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பீட் மாவடத்தில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 4 வரை முழு ஊரடங்கு விதிக்கப்படும் என பீட் மாவட்ட ஆணையர் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலகட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும்.
அதே போல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மூடப்படும்.
தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மளிகை பொருட்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளுக்கும், மருந்தங்களுக்கும் இந்த ஊரடங்கிலிருந்து விலக்களிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
