தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! அரசு முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு ஏப்ரல் 30ம் திகதி வரை நீட்டிப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மார்ச் 30ம் திகதி மட்டும் 2,342 பேருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நவடடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
மேலும், 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெளியே செல்ல வேண்டம்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
