திருமண ஊர்வலத்தில் காற்றில் பறக்கும் ரூபாய் நோட்டுகள்.., வைரலாகும் பரபரப்பு வீடியோ
திருமண ஊர்வலத்தின் போது ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்ததால் அதனை பொதுமக்கள் எடுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்கள் சில நகைச்சுவையாகவும், விசித்திரமாகவும் இருக்கும். அந்தவகையில், தற்போது வெளியாகிய வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த்நகரில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் திருமண ஊர்வலம் ஒன்றில் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக கூடியுள்ளனர்.
அப்போது, அவர்கள் ரூ.100, ரூ.200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை காற்றில் வீசுகின்றனர். அந்த நேரத்தில் பறக்கும் ரூபாய் நோட்டுகளை அங்கிருந்து பொதுமக்கள் எடுத்துச் செல்கின்றனர்.
இந்த வீடியோவானது அப்சல் மற்றும் அர்மானின் திருமணத்திலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
தற்போது இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் பயனர் ஒருவர், "சகோதரரே, பணத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கவும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |