1994 -ல் ரூ.500க்கு தாத்தா வாங்கிய SBI shares -யை கண்டுபிடித்த பேரன் .., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.500க்கு தாத்தா வாங்கிய SBI பங்கு ஆவணத்தை பேரன் கண்டெடுத்துள்ளார்.
SBI பங்கு சான்றிதழ்
இந்தியாவில் உள்ள சண்டிகரைச் சேர்ந்தவர் தன்மே மோதிவாலா (Dr. Tanmay Motiwala). இவர் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் தன்னுடைய சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை தேடி வந்துள்ளார். அப்போது பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு ஆவணம் (SBI shares) ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "எனது தாத்தா 1994 -ம் ஆண்டில் ரூ.500க்கு SBI பங்கு ஆவணத்தை வாங்கியுள்ளார். அதன் பிறகு அவர் அதை மறந்துள்ளார். ஆனால், எதற்காக இதை வாங்கினார் என்பதை கூட அவர் குறிப்பிடவில்லை.
எனது தாத்தா வாங்கி வைத்திருந்த ரூ.500 மதிப்பிலான எஸ்பிஐ பங்கின் இப்போதைய மதிப்பு என்ன என்பதை பலரும் என்னிடம் கேட்டனர். இதன் மதிப்பு டிவிடெண்ட் வருவாயை (Dividend income) தவிர்த்து ரூ.3.74 லட்சம்.
இந்த தொகையானது தற்போதைய காலத்தில் பெரியதொகையாக இல்லாவிட்டாலும் 30 ஆண்டுகளில் ரூ.500 முதலீடு என்றால் 750 மடங்கு லாபம் கொடுத்துள்ளது.
The power of holding equity ?
— Dr. Tanmay Motiwala (@Least_ordinary) March 28, 2024
My Grand parents had purchased SBI shares worth 500 Rs in 1994.
They had forgotten about it. Infact they had no idea why they purchased it and if they even hold it.
I found some such certificates while consolidating family's holdings in a… pic.twitter.com/GdO7qAJXXL
தற்போது இந்த SBI பங்கு சான்றிதழை டிமேட் கணக்கில் (demat account) வரவு வைப்பது மிகவும் எளிதானது அல்ல. இதுதொடர்பாக துறை சார்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளேன். இந்த பங்கை நான் விற்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |