முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கறிவேப்பிலை லட்டு.., எப்படி செய்வது?
கறிவேப்பிலை செரிமானம், முடி வளர்ச்சி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
மேலும் கறிவேப்பிலை, பித்தம், இரத்த சோகை மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது.
கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் இந்த லட்டுவை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், உடலிற்கு சத்தான கறிவேப்பிலை லட்டுவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சைப்பயிறு- 1 கப்
- பொட்டுக்கடலை- ¼ கப்
- ஏலக்காய்- 3
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 10
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- வெல்லம்- ½ கப்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் பச்சைப்பயிறு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணாலில் பொட்டுக்கடலை மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து நெய்யில் கழுவி உலர வைத்த கறிவேப்பிலை சேர்த்து வறுத்து அனைத்தையும் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து வாணலில் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும்வரை காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக அரைத்த மாவில் வெல்லக்கரைசல் சேர்த்து உருண்டைகளாக பிடித்து அதன் மேல் முந்திரி வைத்தால் சத்தான கறிவேப்பிலை லட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |