வறண்ட முடியை பளபளப்பாக்க இந்த 2 பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் மென்மையான கூந்தலை பெற பெரிதளவில் உதவுகின்றது.
அந்தவகையில், பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற இந்த 2 பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தயிர்- 1 கப்
- கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
பயன்படுத்தும் முறை
முதலில் கறிவேப்பிலையை எடுத்து நன்கு கழுவி கெட்டியான பேஸ்டாக அரைக்கவும்.
பின் கறிவேப்பிலையை நன்கு கழுவி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த இரண்டு பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து மென்மையாக வரும்வரை கைவிடாமல் நன்கு கலக்கவும்.
இப்போது, இந்த கலவையை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
பின்னர், 30 முதல் 40 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு மென்மையான ஷாம்பு கொண்டு கழுவவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடிக்கு நல்ல பளபளப்பைக் கொடுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |