கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரே ஒரு இலை போதும்.., எப்படி பயன்படுத்துவது?
அதிக முடி வளர்ச்சி என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை.
இருப்பினும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், அடர்த்தியான நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- இஞ்சி - சிறிதளவு
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 1
- எலுமிச்சை- 1
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கறிவேப்பிலையை ஊற வைக்கவும்.
அரைமணி நேரத்திற்குப் பிறகு ஊறவைத்த கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை வடிகட்டி அதனுடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இப்போது இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து 2 வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.
இந்த கறிவேப்பிலை சீரத்தை உச்சந்தலை முதல் நுனி வரை தெளித்து மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இந்த சீரத்தை அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தலைமுடியை அலசி கொள்ளலாம் முடி நன்றாக வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |