ஊளைச்சதையை குறைக்கணுமா? இந்த முத்திரை மறக்காமல் 48 நாட்கள் செய்து வாங்க!
Cholestrol
Weight Loss
Exercises
By Kishanthini
இன்றைக்கு பல பெண்களும் சரி ஆண்களும் சரி ஊளைச்சதையினால் பெரும் அவஸ்தைப்பட்டு கொண்டு வருகின்றனர்.
இதற்காக நடைப்பயிற்சி, ஜாகிங், ஜிம் போன்றவற்றை முயற்சி செய்தும் வருகிறார்கள்.
அதிலும் மிக எளிமையாக முத்திரைகளை செய்வதன் மூலமும் நம்முடைய உடலில் உள்ள ஊளைச்சதை, அதிக உடல் எடை ஆகியவற்றைக் குறைக்க முடியும்
அதில் “சூர்ய முத்திரை” ஊளைச்சதையை குறைக்க உதவுகின்றது.
அந்தவகையில் ஊளைச்சதையை குறைக்க சூர்ய முத்திரையை எப்படி செய்யலாம் என்பதை இங்கே காண்போம்.
செய்யும் முறை
- சூர்ய முத்திரையை சுகாசன நிலையில் மற்றும் வஜ்ராசன நிலை ஆகிய இரண்டு நிலைகளிலும் செய்யலாம்.
- முதலில் இரண்டில் ஏதேனும் ஒரு நிலையில் அமர்ந்து கொண்டு நம்முடைய சுவாசத்தை நன்கு கவனிக்க வேண்டும்.
- இரண்டு கைகளையும் முன்னே கொண்டு வந்து தொடகளின் மேல் வைக்க வேண்டும்.
- கைகளை விரித்து மோதிர விரலை மெதுவாக மடித்துக் கொள்ள வேண்டும். அதன் மையத்தில் பெருவிரலை வைக்க வேண்டும்.
- மற்ற விரல்கள் யாவும் தரையை நோக்கி இருக்க வேண்டும்.
- இப்போது கண்களை மூடி இயல்பான மூச்சு ஓட்டத்தைக் கவனித்துக் கொண்டே வர வேண்டும். இதை தொடர்ச்சியாக 48 நாள்கள் செய்தாலே உடல் எடை நன்நாகக் குறையும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
- காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் செய்வது நல்லது.
- சாப்பிடுவதற்கு முன்பாக 2 மணி நேரம் இடைவெளி இருப்பது அவசியம்.
- உணவு சாப்பிட்டிருந்தால் குறைந்தது 2 மணி நேர இடைவெளி விட்டு செய்து வாருங்கள்.
- எந்த முத்திரையாக இருந்தாலும் ஒரே நாளில் பயன் கிடைக்காது. குறைந்தது 48 நாட்கள் செய்து வருதல் நல்லது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US