புலம்பெயர்வோர் குறைந்தால் பிரித்தானியாவுக்கு இழப்பு: ஊடகவியலாளர் அளிக்கும் விளக்கம்
Cutting immigration to the UK means billions less for the Treasury: புலம்பெயர்தலைக் குறைப்பதால் பிரித்தானியாவுக்கு இழப்பு என்கிறார் ஊடகவியலாளர் ஒருவர்.
பிரித்தானியா, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.

சட்டவிரோத புலம்பெயர்தலை மட்டுமல்ல, சட்டப்படி பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கும் கட்டுப்பாடுகள் கடுமையாகிவருகின்றன.
ஆனால், புலம்பெயர்தலைக் குறைப்பதால் பிரித்தானியாவுக்கு இழப்பு என்கிறார் தி கார்டியன் ஊடகவியலாளரான ஸோயி வில்லியம்ஸ் (Zoe William) என்பவர்.
புலம்பெயர்தலைக் குறைப்பதால் பிரித்தானியாவுக்கு இழப்பு
பிரித்தானியா ஒவ்வொரு முறை 100,000 புலம்பெயர்வோரை இழக்கும்போதும், பிரித்தானியாவுக்கு 7 பில்லியன் பவுண்டுகள் இழப்பு என்கின்றன பட்ஜெட் பொறுப்புடைமை அலுவலகத் தரவுகள்.
பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருகிறது என்று கூறும் வில்லியம்ஸ், சர்வதேச மாணவர்கள், திறன்மிகுப் பணியாளர்கள் என ஒவ்வொரு பிரிவினரையும் பிரித்தானியா ஊக்கமிழக்கச் செய்துகொண்டே இருந்தால், பிரித்தானியாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்கிறார்.

அதாவது, பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோரில் பெரும்பான்மையானவர்கள் வேலை செய்யும் வயதிலுள்ளவர்கள். அவர்கள் வரி செலுத்துகிறார்கள்.
விசாவுக்காக வசூலிக்கப்படும் கட்டணமே பல பில்லியன் பவுண்டுகள் வருவாயைக் கொண்டுவருகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆக, புலம்பெயர்வோரால் பிரித்தானியாவுக்கு லாபம் என்று கூறும் வில்லியம்ஸ், புலம்பெயர்தலைக் குறைப்பதால் பிரித்தானியாவுக்கு இழப்பு என்கிறார்!