பிரித்தானியாவில் பல வீடுகளில் இந்த அத்தியாவசிய பொருள் இல்லை: அதிர்ச்சியளிக்கும் தகவல்
உலக நாடுகள் பலவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரித்தானியாவில், பல வீடுகளில் ஒரு அத்தியாவசியமான பொருள் இல்லை என்னும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதிர்ச்சியளிக்கும் தகவல்
பிரித்தானியாவில், சுமார் 4.2 மில்லியன் வயது வந்தோர், hygiene poverty என அழைக்கப்படும், அடிப்படை விடயமான பற்பசை, பிரஷ் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்னும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Image: Shutterstock
விலைவாசி உயர்வு காரணமாக, தவிர்க்க முடியாதவையாகிய, மின் கட்டணம், உணவு ஆகிய பொருட்களுக்கு செலவு செய்வதற்காக, பற்பசை, பிரஷ் போன்ற விடயங்களை பல குடும்பங்கள் தவிர்க்கின்றனவாம்.
ஒரு தாயின் தவிப்பு
லிசா என்னும் 34 வயது பெண்ணுக்கு முறையே 10 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். கணவர் இல்லாமல், தானே தன் பிள்ளைகளை வளர்த்துவருகிறார் லிசா.
விலைவாசி உயர்வால் வாடும் லிசா, பிள்ளைகளுக்கு நல்ல உணவு கொடுக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக எப்படியாவது சத்துள்ள பழங்கள் காய்கறிகளை வாங்கி, திட்டமிட்டு சமைத்து உணவளிக்கிறார்.
ஆனாலும் பட்ஜெட் இடிக்கிறது. எதை தவிர்க்கமுடியும் என்று யோசித்து, கடைசியில், பற்பசை (toothpaste) போன்ற விடயங்களை தவிர்த்துள்ளார் லிசா.
மருத்துவரின் அதிர்ச்சி
இந்நிலையில், குழந்தைகள் நல மருத்துவரான Dr ஜூலியா (Dr Julia Hurry), பல குடும்பங்களில் ஒரே ஒரு பிரஷ்ஷை மொத்தக் குடும்பமும் பயன்படுத்துவதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கிறார்.
என்னால் இயன்றவரை, இலவசமாக பற்பசை மற்றும் பிரஷ்களை வழங்குகிறேன் என்று கூறும் Dr ஜூலியா, பற்பசை போன்ற அத்தியாவசியமான விடயங்கள் கிடைக்காததால், இங்கிலாந்தில் சில இடங்களில் இரண்டில் ஒரு ஐந்து வயது குழந்தைக்கு பற்களில் பிரச்சினை உள்ளது என்கிறார்.
அது, பிள்ளைகள் வளர்ந்தாலும், அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கும் என்று கூறும் Dr ஜூலியா, நமில் பலர் பற்பசை மற்றும் பிரஷ்களை அலட்சியமாக பயன்படுத்துகிறோம். ஆனால், அதைக் கூட சிலரால் வாங்க இயலவில்லையென்பது மோசமான விடயம் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |