குக் வித் கோமாளி பிரியங்கா, மணிமேகலை.., இவர்களுக்கு யாருக்கு சம்பளம் அதிகம் தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி விளங்குகிறது.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி தற்போது 5வது சீசன் நடந்துகொண்டிருக்கிறது.
இதில் சில சீசன்களுக்கு முன்பு கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த சீசனில் ரக்ஷனுடன் தொகுப்பாளராக பங்கேற்றார்.
இதில் முக்கிய போட்டியாளராக பங்கேற்ற பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் சண்டை மூண்டது.
இந்நிலையில், கடந்த வாரம், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்தார்.
இவர்களின் சண்டையில், குக் வித் கோமாளி பிரபலங்கள் பலர் பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம் பெற்றிருக்கும் அனைவருக்குமே அவர்கள் வரும் ஒரு நாள் ஷூட்டிற்கான சம்பளம் வழங்கப்படும்.
அந்த வகையில் பிரியங்காவிற்கு வழங்கப்படும் சம்பளம் குறித்தும் மணிமேகலைக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரியங்காவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு சுமார் 18 முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதேபோல், தொகுப்பாளர் மணிமேகலைக்கு 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |