என்னை வெளியேற்றுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி: ஒலிம்பிக் வெற்றி வீராங்கனை வேதனை !
காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து வெளியேறியதன் காரணத்தை இந்தியாவின் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மனம் திறந்து தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாட்டில் நடைபெற்ற தொடர் போட்டிகளில் விளையாண்டு வந்த சாய்னா நேவால் தற்போது தான் தாயகம் திரும்பியுள்ளர், என்பதால் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான தகுதி சுற்றுபோட்டியில் தன்னால் கலந்துகொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.
தகுதி சுற்றுப்போட்டில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்ததால் இரண்டு வாரங்களில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து சாய்னா நேவால் வெளியேறி இருப்பது உறுதியாகியுள்ளது.
In 2 weeks time , As a senior player to participate in back to back events nonstop is impossible and it’s risking injuries , such short notice is not possible . I’ve conveyed this to BAI but there has been no response from them .It seems like they’re happy to put me out of CWG n
— Saina Nehwal (@NSaina) April 14, 2022
இந்தநிலையில் தகுதி போட்டியை புறக்கணித்ததற்கான காரணத்தை சாய்னா நேவால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், அதில் ஐரோப்பாவில் தொடர்ந்து 3 வாரங்களாக விளையாடி விட்டு தற்போது தான் தாயகம் திரும்பியுள்ளேன்.
நிலைமை இப்படி இருக்கும்போது, இரண்டு வாரங்களில் ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கவுள்ளது, அதனை மனதில் கொண்டு நான் தகுதி சுற்றில் உடனடியாக கலந்து கொண்டால் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவற்றில் இருந்து வெளியேறினேன்.
சீறிப்பாய்ந்த பந்தை ஒற்றை கையில் பாய்ந்து பிடித்த விராட் கோலி: திகைத்துப்போன அனுஷ்கா சர்மா!
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் தகுதி போட்டியில் என்னால் பங்கேற்க இயலாது என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்திற்கும் தகவல் தெரிவித்து இருந்தேன்.
ஆனால் இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்தில் இருந்து எத்தகைய பதிலும் இதுவரை வரவில்லை, ஒருவேளை என்னை காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து என்னை வெளியேற்றுவது பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு மகிழ்ச்சி அளிப்பதுபோல் தோன்றுகிறது' என்று தெரிவித்துள்ளார்.