சயனைடு விஷம் காரணமாக 15 யானைகள் உயிரிழப்பு: கென்யா தேசிய பூங்காவில் சோகம்
கென்யாவின் தேசிய பூங்காவில் 15 யானைகள் சயனைடு விஷம் காரணமாக உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சயனைடு விஷம் காரணமாக 15 யானைகள் உயிரிழப்பு
கென்யாவின் புகழ்பெற்ற அம்போசெலி தேசிய பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் 15 யானைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த 15 யானைகளும் விவசாய பூச்சிக்கொல்லிகளில் இருந்த சயனைடு விஷம் பாதித்ததால் தான் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு வனவிலங்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தன்சானிய நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள இந்த பூங்காவில், விவசாயிகள் பயிரிட்டு இருந்த நச்சுத்தன்மை கொண்ட பூச்சுக்கொல்லிகள் தெளிக்கப்பட்டிந்த தக்காளிப் பழங்களை உட்கொண்டதாலே 15 யானைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்று கென்ய வனவிலங்கு சேவை அமைப்பின் பேச்சாளர் டங்கன் ஜுமா வன்யாமா(Duncan Juma Wanyama) தெரிவித்துள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, உயிரிழந்த யானைகளின் வயிற்றில் தக்காளி பழங்கள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட செயலா? அல்லது தற்செயல் நிகழ்வா?
யானைகள் சயனைடு இருந்த தக்காளி பழங்களை உட்கொண்டது தற்செயல் நிகழ்வா? அல்லது திட்டமிட்ட செயலா? என பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சயனைடு என்பது நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய உடல் பாகங்களை உடனடியாக பாதிக்கக்கூடிய கொடிய நச்சுப் பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |