ஜேர்மனி உட்பட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்! மூன்றாவது நாளாக பாதிப்பு
ஐரோப்பா முழுவதும் விமான நிலைய சைபர் தாக்குதல் அதிக விமானங்களை பாதித்தது.
விமான சேவைகள்
சைபர் தாக்குதலின் விளைவாக பல ஐரோப்பிய விமான நிலையங்களில் check-in அமைப்புகள் பாதிப்பை சந்தித்தன.
குறிப்பாக ஜேர்மனியின் பெர்லினில் உள்ள பிரண்டன்பர்க், லண்டனில் உள்ள ஹீத்ரோ ஆகிய முக்கிய விமான சேவைக்கான மென்பொருள் தளம் பாதிக்கப்பட்டதால் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் விமான சேவைகள் முடங்கின. இது மூன்றாவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.
பின்னால் இருப்பது யார்
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த சைபர் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது யார் என இதுவரை தெரியவில்லை.
ஆனால் இதன் பின்னணியில் ஹேக்கர்கள், குற்றவியல் அமைப்புகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |