பிரித்தானியாவிலும் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்!
Cyber attack hits UK freezers after Europe chaos: ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பல்பொருள் அங்காடிகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ள நிலையில், பிரித்தானியாவிலும் சைபர் தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழு ஐரோப்பிய நாடுகளில், கடைகளிலுள்ள ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸர்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
இந்நிலையில், பிரித்தானியாவிலுள்ள ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸர்கள் சிலவும் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவிலும் சைபர் தாக்குதல்
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், பல்பொருள் அங்காடிகளில் உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸர்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்துவரும் நிலையில், பிரித்தானியாவிலுள்ள சில நிறுவனங்களிலுள்ள ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸர்களும் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தேசிய சைபர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, நாட்டின் மூத்த சைபர் பாதுகாப்பு துறைத் தலைவரான Dr ரிச்சர்ட் (Dr Richard Horne), பிரித்தானிய மக்கள், அரசின் எச்சரிக்கைக்கிணங்க அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், உடனடியாக ஃப்ரிட்ஜ் வெப்பநிலைக் கட்டுப்பாடுகள் தொடர்புடைய சாஃப்ட்வேரை அப்டேட் செய்யுமாறு, பிரித்தானிய தேசிய சைபர் பாதுகாப்பு மையம் பிரித்தானிய சில்லறை வியாபாரிகளை எச்சரித்துள்ளது.

சைபர் தாக்குதலுக்குள்ளாகி, ஃப்ரிட்ஜ்களின் வெப்பநிலை 55 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரித்ததால் பாதிகப்பட்டவர்களில் பிரித்தானியாவில் மாமிச விநியோகம் செய்யும் சில நிறுவனங்களும் அடங்கும் என தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான Dr ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
இந்த ஃப்ரிட்ஜ்களை குறிவைக்கும் ஹேக்கர்கள், முதலில் ஃப்ரிட்ஜ்கள் பாதிக்கப்பட்டால் அது குறித்து எச்சரிக்கும் வெப்பநிலை அலாரம்களை செயலிழக்கச் செய்கிறார்கள்.

ஆக, ஃப்ரிட்ஜின் வெப்பநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்னும் விடயம் சம்பந்தப்பட்ட நிறுவன மேலாளர்களுக்கு தெரியவரும்போது, ஏற்கனவே மோசமான அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது!
இதற்கிடையில், சமீபத்தில்தான் பிரித்தானிய அமைச்சர்கள் சிலர், மோசமான வானிலை மற்றும் சைபர் தாக்குதல்கள் போன்ற தேசிய அவசரநிலை ஏற்படும் பட்சத்தில், அதை எதிர்கொள்வதற்காக, மூன்று நாட்களுக்கான உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானியர்களை அறிவுறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.