10,300 கோடி சுருட்டிய சைபர் கொள்ளையர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10,300 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சைபர் மோசடி
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
மக்கள் பலர் செல்போன் வாயிலாக வரும் போலியான குறுந்தகவல்கள், அழைப்புகள் மூலம் பணத்தை இழந்துள்ளனர்.
இதுகுறித்த ஆய்வை இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் மேற்கொண்டது. அதன் முடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
10,300 கோடி மோசடி
அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 10,300 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் சைபர் கிரைம் குற்றவாளிகள் இவ்வாறு மோசடி செய்த பணத்தில் 1,127 கோடி ரூபாய் வரையிலான பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயல் அதிகாரி ராஜேஷ்குமார் இதுகுறித்து கூறுகையில், 'தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 5,000 புகார்களை தேசிய சைபர் கிரைம் போர்டலில் பதிவு செய்துள்ளனர்.
இதில் 50 சதவீதம் அளவிலான மோசடிகளை சீனா, கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சைபர் கிரைம் கும்பல்கள் செய்துள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவில் உருவாக்கப்பட்ட செயலிகள் மூலமாக அதிகளாவில் மோசடி நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |