பழங்கால நாணயங்களுக்கு ரூ.2 கோடி வரை தருவதாக கூறி சைபர் மோசடி.., உயிரை மாய்த்துக் கொண்ட முதியவர்
பழங்கால நாணயங்களுக்கு ரூ. 2 கோடி வரை தருவதாக கூறி சைபர் மோசடியில் ஏமாந்த முதியவர் துப்பாக்கியால் சுட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
சைபர் மோசடி
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், ரேவா நகரைச் சேர்ந்தவர் சரோஜ் துபே (65). இவர் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு கடந்த 1-ம் திகதி அன்று தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
அப்போது, அவர் தன்னை பழங்கால நாணய நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டார். மேலும், அவர் பழங்கால நாணயங்களை அரசு வாங்குவதாகவும், அதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய துபே தன்னிடம் இருந்த பழங்கால நாணயங்களின் படங்களை மோசடி நபருக்கு அனுப்பியுள்ளார். இதற்காக, துபேவுக்கு ரூ.66.75 லட்சம் வழங்குவதாகவும் செயலாக்க கட்டணமாக ரூ.520 செலுத்துமாறும் அவர்கள் கூறியுள்ளார்.
இதனை நம்பிய துபே அவர்களுக்கு பணம் அனுப்பியுள்ளார். ஆனால், வரி மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த மேலும் பணம் வேண்டும் என்று அவர்கள் கூறியதால் பலரிடம் கடன் வாங்கி ரூ.37,000 அனுப்பி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்தும் அவர்கள், ரூ.10,000 டெபாசிட் தொகை கேட்டவுடன் தான் துபேயின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. அப்போது அவர்கள் துபேயிடம் ஏமாற்றப்பட்டதைக் கூறியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த துபே தனது தந்தை உரிமம் வாங்கி வைத்த துப்பாக்கியால் சுட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |