நாட்டையே புரட்டிப்போட்ட சூறாவளி! 400 பேர் மரணம்
ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மலாவி
ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் Freddy என்ற பருவகால சூறாவளி தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது.
குறிப்பாக தெற்கு பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதுவரை இந்த சூறாவளிக்கு 400 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.
africanews
JACK MCBRAMS/AFP or licensors
தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் பெருகிய முறையில் பயனற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கைகள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
அவசரகால முகாம்கள்
மொஸாம்பிக் பகுதியில் 73 பேரும், மடகாஸ்கரில் 17 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 300க்கும் மேற்பட்ட அவசரகால முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த பேரழிவு நிலையால் இரண்டு வாரங்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.