புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமா..? - "இந்த எண்ணிற்கு அழைக்கலாம்"
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க நினைப்பவர்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு அழைக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பு
கடந்த நாட்களில் விடாமல் பெய்த மழையின் காரணமாகவும் மிக்ஜாம் புயல் காரணமாகவும் வெள்ளம் ஏற்பட்டு பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயலானது 100 கி.மீ வேகத்தில் ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தினால் மூடப்பட்டு மின்சாரம் தடைசெய்யப்பட்டு பொது மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்.
Photo by Idrees Mohammed/EPA-EFE
இவர்களுக்கு பல பிரபலங்கள் நிவாரணம் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் நிவாரணம் வழங்க நினைப்பவர்கள் இந்த எண்ணை தொடர்புக்கொள்ளவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி என அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
Image Courtesy: PTI.
மேலும் பல தொண்டு நிறுவனங்களும் முன் வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள். இவ்வாறு தொண்டு நிறுவனங்கள் மூலம் வரப்பெறும் நிவாரணப் பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க நினைக்கும் தொண்டு நிறுவனங்கள், 7397766651 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புக்கொள்ளவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |