அமெரிக்காவில் வேகமாக பரவும் Cyclosporiasis: 31 மாகாணங்கள் பாதிப்பு
சைக்ளோஸ்போரியாசிஸ் என்ற ஒட்டுண்ணித் தொற்றுப் பரவல் அமெரிக்காவில் 31 மாநிலங்களுக்கு பரவியுள்ளது.
அமெரிக்காவில் பரவும் சைக்ளோஸ்போரியாசிஸ்
சைக்ளோஸ்போரியாசிஸ்(Cyclosporiasis) என்ற கடுமையான குடல் சார்ந்த பாக்டீரியா ஒட்டுண்ணித் தொற்றானது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.
கிட்டத்தட்ட 31 மாகாணங்களில் இந்த தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3000 பேர் இந்த ஒட்டுண்ணி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 86 பேர் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சைக்ளோஸ்போரியாசிஸ் என்பது என்ன?
சைக்ளோஸ்போரியாசிஸ் என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் உணவுகள் வழியாக பரவக் கூடிய நோயாகும்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சோர்வு, உடல் வலி, வயிற்றுப் பிடிப்பு, வாயு தொல்லை, காய்ச்சல், பசியின்மை மற்றும் குமட்டல் ஆகியவற்றால் அறிகுறிகளாக தென்படும்.
பொதுவாக அசுத்தமான உணவு பொருட்களை சாப்பிடும் போது ஒட்டுண்ணி பரவலானது ஏற்படும். ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு தான் இதற்கான அறிகுறியை வெளிப்படுத்தும்.
பரவுவது எப்படி?
இது மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு நேரடியாக சுவாச வழி பாதை வழியாகவோ அல்லது தொடுதல் மூலமாகவோ பரவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுத்தமான காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றின் மேல்புறத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் ஒட்டுண்ணி ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அதை உட்கொள்ளும் போது தொற்றானது பரவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |