வாத்து குடும்பத்தை காப்பாற்றிய தந்தைக்கு குழந்தைகள் கண்முன் நேர்ந்த பயங்கரம்
அமெரிக்காவில் வாத்து குடும்பத்தை சாலையை கடக்க உதவிய தந்தை தன் இரண்டு குழந்தைகள் கண் முன் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ராக்லினில் ஒரு சந்திப்பின் குறுக்கே தாய் வாத்தையும் அதன் குட்டிகளையும் சாலையை பத்திரமாக கடக்க உதவியுள்ளார் கேசி ரிவாரா (41).
இதற்காக, தனது காரிலிருந்து இறங்கி சென்று எந்த வாகனமும் வாத்து குடும்பத்தை கலைத்துவிடாமலும், அவை சீக்கிரம் சாலையை கடக்கவும் உதவினார்.
Picture: KCRA
பிள்ளைகள் கண்முன்
அவரது செயலைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகள், பயணிகள் அவரை பாராட்டிக்கொண்டிருந்தனர். ரிவாராவின் காரில் அமர்ந்திருக்கும் அவருடைய 11 வயது மற்றும் 6 வயது குழந்தையும், தந்தை வாத்துகளை அனுப்பிவிட்டு வந்துவிடுவார் என காத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ வந்த கார் ஒன்று அவர் மீது மோதி தூக்கிவீசியது. அவரது பிள்ளைகள் கண்முன்னே அவரது உயிர் பிரிந்தது. அவரச உதவிகள், துணி வருந்துவார்கள் வந்தபோதும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
FundMe
17 வயது சிறுவன்
விபத்துக்கு காரணமான காரை 17 வயது சிறுவன் ஓட்டிவந்துள்ளான். இந்த சம்பவம் ஒரு விபத்து என்றே இதுவரை கருதப்படுகிறது.
17 வயது கார் ஓட்டுநர் ஒத்துழைத்ததாகவும், அவர் எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
FundMe
இதனிடையே, ரிவாராவின் அத்தை அவரது குடும்பத்திற்காக GoFundMe page-ல் சம்பவத்தை பதிவு செய்து தந்தையை இழந்த குடும்பத்திற்காக நிதி திரட்டிவருகிறார்.இதுவரை 46,000 பவுண்டுகளுக்கு மேல் கிடைத்துள்ளது.