"தூக்கி தரையில் அடித்தேன்" 8 நாள் குழந்தையை கொன்ற கொடூர தந்தையின் பதறவைக்கும் வாக்குமூலம்!
குழந்தை தனது முக சாயலில் இல்லை என மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் பிறந்து 8 நாளே ஆன குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம் கடலூரில், சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடி கிராமத்தில் ராஜீவ் - சிவரஞ்சனி தம்பதி வசிக்கின்றனர்.
இவர்களுக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தையைப் பார்த்த ராஜீவ், குழந்தை தனது முக சாயலில் இல்லை என்று கோபமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
பின்னர் குழந்தையுடன் சிவரஞ்சனி தனது தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஒரு வாரம் கழித்து சிவரஞ்சனியின் வீட்டுக்கு வந்த ராஜிவ், நல்லவனாக நாடகமாடி குழந்தையை வாங்கி கொஞ்சியுள்ளார்.
பின்னர், இரவில் அனைவரும் தூங்கிய வேளையில், குழந்தையை தூக்கிய ராஜீவ், தரையில் தூக்கி அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார்.
தூக்கத்திலிருந்து முழித்து பார்த்த சிவரஞ்சனி குழந்தையின் நிலையைப் பார்த்தது பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ராஜீவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையின் தொப்புள் கோடியைப் பிடித்து இழுத்து, தரையில் தூக்கி அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ராஜிவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
குழந்தை தனது சாயலில் இல்லை எனக் கூறி, மனைவியின் மீது சந்தேகப்பட்ட கணவன் பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.