இன்சூரன்ஸ் காப்பீடு தொகைக்காக மகனை கொன்ற தந்தை: அம்பலமான சதி திட்டம்
சீனாவில் இன்சூரன்ஸ் காப்பீடு தொகைக்காக சொந்த மகனை கொன்ற தந்தைக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மகனை கொன்ற தந்தை
சீனாவின் சான்மிங் நகரில் ஸாங் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ள தந்தை ஒருவர், இன்சூரன்ஸ் காப்பீடு தொகைக்காக சொந்த மகனின் இறப்பை அவரது சித்தப்பா மகனின் உதவியுடன் விபத்து போல் அரங்கேற்றிய சம்பவம் புஜியான் மாகாண நீதிமன்ற விசாரணையில் அம்பலப்பட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த ஸாங், அவற்றை சரி செய்ய லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த சித்தப்பா மகனின் உதவியுடன் சொந்த மகனின் இறப்பை விபத்து போல் மாற்றியுள்ளார்.

ஸாங் அரங்கேற்றிய கொலைக்கு பிறகு, சில மாதங்களில் மகனின் காப்பீட்டு தொகை 1,80,000 யுவானை ஸாங் பெற்றுள்ளார், அதில் 30,000 யுவானை மகனை கொலை செய்ய உதவிய சித்தப்பா மகனுக்கு வழங்கியுள்ளார்.
கையும் களவுமாக சிக்கிய நபர்கள்
அதே சமயம் விபத்தை சித்தப்பா மகன் சாலைப் போக்குவரத்து கல்வித் தகுதியை பெறாமல் வாகனத்தை ஓட்டி இருப்பதால் காப்பீட்டு தொகைக்கான நிதிப் பொறுப்பை லொறியின் உரிமையாளரான லுஓ மீது மாற்றியது.
இதனால் சந்தேகமடைந்த லுஓ, ஸாங் மற்றும் அவரது சித்தப்பா மகனின் கொலை சதித்திட்டம் குறித்து அம்பலப்படுத்தினார்.
இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் இது உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த சிறுவனின் தந்தைக்கு மரண தண்டனையும், கொலைக்கு உதவிய சித்தப்பா மகனுக்கு 2 ஆண்டுகள் ஒத்திவைப்புடன் கூடிய மரண தண்டனை மற்றும் 30,000 யுவான் அபராதம் விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |