ஏன் இப்படி செய்தாய்... அவன் உன்னை எவ்வளவு நேசித்தான்? குழந்தையை தன் காதலியே கொலை செய்ததை அறிந்த தந்தை கதறல்
அமெரிக்காவின் ஹியூஸ்டனின் வாழ்ந்து வந்த ஒரு சிறுவன் திடீரென மாயமான நிலையில், அவனை தன் காதலியே கொலை செய்துவிட்டதை அறிந்த அந்த சிறுவனின் தந்தை, ஏன் இப்படி செய்தாய், அவன் உன்னை எவ்வளவு நேசித்தான் என கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.
Dalton Olson, Sarah Olson தம்பதிக்குப் பிறந்த மகன் Samuel Olson(6). தம்பதியர் விவாகரத்து செய்துவிட்டனர். மகன் Samuel தாயுடன் அனுப்பப்பட்டான், என்றாலும் மாறி மாறி இரு பெற்றோருடனும் வாழ்ந்துவந்தான் Samuel.
Dalton தற்போது தன் காதலியான Theresa Balboaவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சென்ற மாதம் (மே மாதம்) 27ஆம் திகதி, தன் மகனைக் காணவில்லை என கண்ணீருடன் பேட்டியளித்தார் Dalton. அவரது அருகில் அவரது தோளில் சாய்ந்து விசும்பினார் Theresa.
ஆனால், அந்த குழந்தையின் கொலையில் அவரே சம்பந்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளதால், சிறுவனின் தந்தை உட்பட அனைவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். குழந்தையைக் காணவில்லை என குடும்பம் பதற்றத்தில் இருக்கும் நிலையில், சென்ற திங்கட்கிழமை, தன் நண்பர் ஒருவரை அழைத்த Theresa, தன்னை கிடங்கு ஒன்றிற்கு அழைத்துச் செல்லுமாறு கோரியிருக்கிறார்.

அந்த நண்பர் வர, இருவருமாக 70 மைல் தொலைவிலுள்ள கிடங்கு ஒன்றிற்கு செல்ல, அங்கிருந்து குப்பைத் தொட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு 160 மைல் பயணித்து, ஜாஸ்பர் என்ற இடத்திலுள்ள ஒரு ஹொட்டலுக்குச் சென்றுள்ளார்கள்.
ஆனால், அந்த குப்பைத்தொட்டியிலிருந்து மோசமான நாற்றம் வீசியதால், அந்த நண்பர் ரகசியமாக பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். பொலிசார் வந்து Theresa தங்கியிருந்த ஹொட்டல் அறையை சோதனையிட, அங்கிருந்த குப்பைத்தொட்டிக்குள் சிறுவன் ஒருவனின் உடல் டேப்பால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
உடனடியாக பொலிசார் Theresaவைக் கைது செய்துள்ளனர். நடந்தது என்னவென்றால், சிறுவன் Samuelஐக் காணவில்லை என மே மாதம் 27ஆம் திகதி Theresa கண்ணீருடன் பேட்டி கொடுத்திருந்தார்.
ஆனால், உண்மையில் மே 10ஆம் திகதியே அவன் இறந்துபோனதாக தனது அறை நண்பரான மற்றொரு ஆணிடம் கூறியுள்ளார் அவர். அந்த ஆணும் Theresaவும் ஒரே அடுக்குமாடிக்குடியிருப்பில் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர் வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது, கட்டிலில் காயங்களுடன் பேச்சு மூச்சின்றிக் கிடந்திருக்கிறான் சிறுவன் Samuel.

உடனே அந்த ஆணும் Theresaவும் சேர்ந்து குழந்தையைத் தூக்கி குளிக்கும் தொட்டிக்குள் போட்டிருக்கிறார்கள். அவனது உடல் அங்கேயே இரண்டு நாட்கள் கிடந்திருக்கிறது.
பிறகு அவனைக் கட்டி ஒரு குப்பைக் கூடைக்குள் போட்டு டெக்சாசிலுள்ள ஒரு கிடங்கில் கொண்டு போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் இருவரும். அங்கிருந்து மற்றொரு நண்பரின் உதவியுடன் குழந்தையின் உடலை காரில் ஹொட்டலுக்கு கொண்டுவந்தபோதுதான் நாற்றம் வீசுவதைக் கண்டு அவர் இரகசியமாக பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
தன் காதலியாக தன்னுடன் வாழ்ந்து, தன்னுடனேயே அழுது குழந்தையைக் காணவில்லை என பேட்டியும் கொடுத்த Theresaவே தன் குழந்தையின் மரணத்தின் பின்னணியில் இருப்பதால் அதிர்ந்து போயிருக்கிறார் Samuelஇன் தந்தையான Dalton. Theresa ஏன் குழந்தையைக் கொலை செய்தார் என்பதை அறிவதற்காக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
