இந்தியர்களே செல்ல அனுமதியில்லாத இந்திய கிராமம்.., எது தெரியுமா?
பொதுவாக, இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
அதன்படி, இந்தியர்களே செல்ல அனுமதியில்லாத இந்திய கிராமம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
அந்தவகையில், மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் தஹாகிராம்–அங்கர்போட்டா என்ற பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதி இந்திய நிலப்பரப்பால் முழுவதும் சூழப்பட்டிருந்தாலும், வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

சுமார் 18.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியில் 20,000க்கும் மேற்பட்ட வங்காளதேச மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் வங்காளதேச நாணயம், மொபைல் சேவை மற்றும் அரசு வசதிகளையே பயன்படுத்துகின்றனர்.
1992க்கு முன்பு, இந்தப் பகுதி வங்காளதேசத்தின் பிரதான நிலப்பகுதியுடன் நேரடி இணைப்பு இல்லாமல் இருந்ததால், மக்கள் பல சிரமங்களை சந்தித்தனர்.
இதற்கு தீர்வாக, இந்தியா மற்றும் வங்காளதேசம் இணைந்து டின் பிகா வழித்தடத்தை அமைத்தன.
178 மீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம், தஹாகிராம்–அங்கர்போட்டாவை வங்காளதேசத்துடன் இணைக்கிறது.
இந்தப் பகுதி இந்தியாவுக்குள் இருந்தாலும், அதன் நிர்வாகத்தை வங்காளதேசமே மேற்கொள்கிறது.
பாதுகாப்பு காரணங்களால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்தியர்கள் இந்தப் பகுதிக்குள் செல்ல விரும்பினால், அதிகாரப்பூர்வ அனுமதி பெறுவது அவசியம்.
மேலும், அனுமதியின்றி இந்த பகுதிற்குள் நுழைவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |