இன்னும் 40 ஆண்டுகள் உயிருடன்... தலாய் லாமா ஆருடம்
தாம் 130 வயதுக்கு மேல் வாழ்வேன் என்று நம்புவதாக தலாய் லாமா சனிக்கிழமையன்று கூறினார், இது அவரது முந்தைய கணிப்பை விட இரண்டு தசாப்தங்கள் அதிகமாகும்.
14வது தலாய் லாமா
ஞாயிற்றுக்கிழமை தனது 90வது பிறந்தநாளை சிறப்பிக்க இருக்கும் தலாய் லாமா, அவரது நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வதற்காக ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
தாம் 110 வயது வரையில் உயிருடன் இருப்பேன் என நம்புவதாக கடந்த டிசம்பர் மாதம் தலாய் லாமா குறிப்பிட்டிருந்தார். புத்த தர்மத்திற்கும் திபெத்திய மக்களுக்காகவும் இதுவரை தாம் சிறப்பாக சேவை செய்ய முடிந்தது என்று பிரார்த்தனைகளுக்கு இடையில் அவர் கூறினார்.
இன்னும், தாம் 130 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வேன் என்று நம்புவதாக அவர் கூறவும், அவரது ஆதரவாளர்களிடையே கைதட்டல்களும் ஆரவாரங்களும் வெடித்துக் கிளம்பியது.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு
திபெத்திய பௌத்தத்தின் நீண்ட காலம் வாழ்ந்த 14வது தலாய் லாமா, தனது கோவிலில் பிரார்த்தனைகளில் சுமார் 90 நிமிடங்கள் செலவிட்டார். வட இந்திய மலை நகரமான தர்மசாலாவில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு பிரிவினைவாதி
சீன ஆட்சிக்கு எதிரான தோல்வியுற்ற கிளர்ச்சியைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு திபெத்தை விட்டு வெளியேறியதிலிருந்து அவர் தர்மசாலாவில் வசித்து வருகிறார்.
நாம் நமது நாட்டை இழந்துவிட்டோம், இந்தியாவில் தஞ்சம் புகுந்து வாழ்கிறோம். எனவே, தர்மசாலாவில் வசிக்கும் நான், என்னால் முடிந்தவரை மனிதர்களுக்கும் தர்மத்திற்கும் சேவை செய்ய விரும்புகிறேன் என்றார்.
திபெத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்த சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது, தற்போதைய தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாதியாகக் கருதுகிறது.
தலாய் லாமாவிற்கு உலகம் முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான திபெத்திய பௌத்தர்களைத் தாண்டியும் மக்கள் ஆதரவு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மூத்த இந்திய அமைச்சர்கள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தூதர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அவரது பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |