நான் பார்த்ததிலே மிகச்சிறந்த விக்கெட் இது தான்! டேல் ஸ்டெயின் புகழாரம்: வீடியோ
இஷாந்த் சர்மா எதிரணி வீரர் விஜய் சங்கருக்கு வீசிய பந்து மிகவும் சிறப்பான பந்து என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணியை வீழ்த்திய டெல்லி
ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 130 ஓட்டங்கள் மட்டுமே குவித்து குஜராத் அணிக்கு இலக்கை நிர்ணயித்தது.
நடப்பு சீசனில் சேஸிங் கிங்ஸ் என்று அழைக்கப்படும் அளவுக்கு சிறப்பான பேட்டிங் வரிசையை கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது மிகவும் எளிதான இலக்காக முதலில் கருதப்பட்டது.
WHAT A BALL BY ISHANT SHARMA.pic.twitter.com/aKztAQ5pna
— CricketMAN2 (@ImTanujSingh) May 2, 2023
ஆனால் டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்து வெளியேறினர் மற்றும் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 125 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி தனதாக்கியது.
டேல் ஸ்டெயின் புகழாரம்
இந்த போட்டியின் இரண்டாவது பேட்டிங்கின் போது 4வது ஓவரை டெல்லி அணி வீரர் இஷாந்த் சர்மா வீசினார்.
அப்போது இஷாந்த் சர்மா வீசிய 4 ஓவரின் 6 பந்தை எப்படி எதிர்கொள்வது என்று கணிப்பதற்குள் எதிரணி வீரர் விஜய் சங்கர் போல்ட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார்.
Okay, Ishant just bowled the best knuckle ball wicket I’ve ever seen!
— Dale Steyn (@DaleSteyn62) May 2, 2023
இந்நிலையில், இஷாந்த் சர்மா கைப்பற்றிய அந்த விக்கெட்டை குறிப்பிட்டு “நான் பார்த்ததிலேயே மிகவும் சிறப்பான நக்கல் பந்து ( knuckle ball) விக்கெட் இதுதான் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.