திபெத்தில் உடைந்த அணை - மீட்பு பணிகளை நிறுத்திய சீனா, நேபாளம்
dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
திபெத்தில் உடைந்த அணை
சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர்.
நேபாள மற்றும் காவல்துறை, ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர்.
இந்நிலையில், திபெத் பக்கத்தில் உள்ள கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு மேலே உள்ள ஒரு நீர்த்தேக்க அணை ஒன்று உடைந்துஉள்ளதாக நேபாள காவல்துறை அறிவித்துள்ளது.
Alert !! pic.twitter.com/grYxhc5N7Q
— Nepal Police (@NepalPoliceHQ) August 28, 2026
மேலும், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இதே போல், சீனாவும் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
வெள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் மலை மீது விரைந்து ஏறி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |