விபரீதமான டிக்டாக் விளையாட்டு: பற்றி எரிந்த 16 வயது இளைஞரின் உடல்
அமெரிக்காவில் டிக்டாக்கின் ஆபத்தான விளையாட்டால், 16 வயது சிறுவனின் உடல் பற்றி எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக்கின் வைரல் ட்ரெண்ட்
டிக்டாக்கில் புதிது புதிதாக வைரலாகி வரும் நிறைய ஆபத்தான சவால்களால், அமெரிக்காவின் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
@gettyimages
இந்நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த மேசன் டார்க் என்ற 16 வயது இளைஞர், டிக்டாக்கில் வைரலாக இருந்த blowtorch என்ற ஒரு சவாலை செய்ய முயன்றுள்ளார்.
அதன்படி Spary paint மற்றும் லைட்டர் மூலம் அவர் தீபத்தை உருவாக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீ பயங்கரமாக பற்றி அவரது உடலை எரித்திருக்கிறது.
மூன்றாம் நிலை எரிந்த உடல்
அச்சமயம் உடல் எரிந்து கொண்டிருந்த நிலையில், உடனே ஆற்றில் குதித்த மேசன் டார்க்கை அங்கிருந்தவர்கள் மீட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 23ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
@ndtv
சில தினங்களுக்கு முன்பு அவருக்கு தோல் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்ட மருத்துவர்கள், மேசன் டார்க்கின் உடல் 75% பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மூன்றாம் நிலை எரிந்த உடலாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
’என் மகன் மேசன், உன் பிரார்த்தனை தேவை, அவரது உடலில் 75% எரிந்துள்ளது. அவன் வாழ்வில் இன்னும் நீண்ட பாதை உள்ளது. அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். அவன் நம்பமுடியாத அளவு வலியில் மயக்கமடைந்துள்ளான்." என இளைஞரின் தாயார் தெரிவித்துள்ளார்.
@gettyimages
கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் டிக்டாக் சவாலில், அதிக மருந்துகளை எடுத்து கொண்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இச்சம்பவம் அமெரிக்க பெற்றோர்களிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.