தர்பூசணியை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துகள்
தர்பூசணி பழத்தை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
என்னென்ன பிரச்சனைகள்
கோடை காலம் நெருங்கி வருவதால் பழங்களை பலரும் அதிகமாக வாங்கி சாப்பிடுவார்கள். குறிப்பாக, தர்பூசணியை பலரும் வாங்கி உட்கொள்வார்கள்.
கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இந்த தர்பூசணி மிகவும் உதவியாக இருக்கும்.
ஆனால், தர்பூசணியை வெட்டி ஒரு பகுதியை சாப்பிட்டு விட்டு மீதி பகுதியை ஃப்ரிட்ஜில் வைத்து சில மணி நேரங்கள் கழித்து சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடுவதால் பல ஆபத்துகள் வருகின்றன.
குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் தர்பூசணியின் ஊட்டச்சத்துக்கள் குறைகிறது. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
நீங்கள் தர்பூசணியை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும்போது அதில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால், தொற்று அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
குளிர்ந்த தர்பூசணியில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். இதனால், வயிறு பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும், தர்பூசணி மிகவும் குளிர்ச்சி என்பதால் இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |