WHO வெளியிட்ட தகவல்!அதிக உப்பு பயன்பாட்டால் ஏற்படவிருக்கும் ஆபத்து.. எச்சரிக்கையாக இருங்க
உப்பில்லா பண்டம் குப்பையிலே எனக்கூறி கேள்விப்பட்டிருப்போம்,ஆனால் அதே உப்பினை அதிகபடியாக உபயோகிப்பதால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக உலக சுகாதார தாபனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
உலக சுகாதார தாபனத்தின் (WHO) அறிவுறுத்தல்
உலக சுகாதாரத் தாபனத்தின் கருத்துப்படி, ஒரு நாளைக்கு 9-12 கிராம் வரை உப்பு உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.
ஆனால் சரியாக பார்த்தால் பெரியவர்கள் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவாக உப்பு உட்கொள்வது உடலுக்கு நன்மை அளிக்கும்.
குறைந்த அளவிலான உப்பின் பயன்பாடு இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய், பக்கவாதம் மற்றும் கரோனரி மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதன் முக்கிய நன்மை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகும்.
WHO உறுப்பு நாடுகள் 2025 ஆம் ஆண்டளவில் உலக மக்கள் உப்பின் உட்கொள்ளலை 30% குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது மக்கள்தொகை சுகாதார விளைவுகளை மேம்படுத்த நாடுகள் எடுக்கக்கூடிய மிகவும் செலவு குறைந்த நடவடிக்கைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
உலகளாவிய உப்பு நுகர்வு பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு குறைக்கப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் 2.5 மில்லியன் இறப்புகளைத் தடுக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறு இதனை சரி செய்வது?
- ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாக உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
-
நுகர்வோர் கடைகளில் வாங்கும் பொருட்களை, உணவு லேபிள்களை படித்து சோடியம் குறைவாக தேர்வு செய்து வாங்க வேண்டும்.
-
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகம் சேர்க்கப்படுவதால் அவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
- காய்கறிகள்,மறக்கறிகள் போன்றவற்றை மக்கள் குறைவாகவே சோ்த்துக்கொள்கின்றனர்.
-
காய்கறிகள் மற்றும் மறக்கறிகளிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இவை ஆரோக்கியமான உணவின் முக்கிய கூறுகளாகும்.
- முடிந்தளவு உப்பின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து உண்ணுங்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.