செங்கடல் பாதையை தவிர்க்க முடிவு செய்த உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனம்: காரணம் இது தான்
செங்கடல் பாதை ஊடாக பயணப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக டென்மார்க் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனமான Maersk அறிவித்துள்ளது.
அனைத்து கப்பல்களும் தாக்கப்படும்
ஈரான் ஆதரவு போராளிகள் குழுவான ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யேமனின் ஒரு பகுதியிலிருந்து செங்கடல் பாதையை பயன்படுத்தும் சரக்கு கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
@getty
ஹமாஸ் படைகளுக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்துள்ள ஹூதிகள், செங்கடல் பாதையில் இஸ்ரேலுக்கு செல்லும் அனைத்து கப்பல்களும் தாக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கடல் பாதையை பொறுத்தமட்டில், எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதிக்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் ஒன்று. இந்த நிலையில், ஜேர்மன் கப்பல் போக்குவரத்து நிறுவனமான Hapag-Lloyd தற்போது செங்கடல் பாதையை தவிர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.
தொடர்புடைய நிறுவனத்தின் கப்பல் ஒன்று சமீபத்தில் ஹூதிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானது. இதனிடையே, உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான Maersk வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
செங்கடலின் Bab al-Mandab பாதை
செங்கடல் பாதையில் வணிகக் கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் ஆபத்தானவை மற்றும் கடல் பயணிகளின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளது.
@getty
தங்களது கப்பல்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டு, சேதமின்றி தப்பியதாக கூறும் அந்த நிறுவனம், மறு அறிவிப்பு வெளியாகும் வரையில் செங்கடல் பாதையை பயன்படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செங்கடலின் Bab al-Mandab பாதை வழியாகவே ஆண்டுக்கு 17,000 கப்பல்கள் பயணிக்கின்றன. அதாவது உலக வர்த்தகத்தில் 10 சதவீதம் இந்த Bab al-Mandab பாதையூடாக முன்னெடுக்கப்படுகிறது.
@reuters
சூயஸ் வழியாக இந்தியப் பெருங்கடலுக்குச் செல்லும் அல்லது வெளியேறும் எந்தக் கப்பலும் இந்த வழியாகத்தான் வர வேண்டும். இதனிடையே, இந்த அச்சுறுத்தலை சமாளிக்க சர்வதேச சமூகத்தினருடனும், அந்த பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடனும், உலக நாடுகளுடனும் இணைந்து செயல்பட அமெரிக்கா களமிறங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |