அஸ்வினை ஏன் சேர்க்கல? இந்தியா தோற்கும் என சொன்ன வீரர்... அப்படியே பலித்த வார்த்தை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இல்லாததால் இந்திய அணி தோற்கும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஸ் கனேரியா கூறியபடியே இந்திய அணி தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட், பர்மிங்காமில் நடந்தது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.
இந்நிலையில் இந்த போட்டி நடைபெற்ற போது நேற்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஸ் கனேரியா ஒரு கருத்தை கூறியிருந்தார். அதன்படி, இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்து தோல்வி பெறும் நிலைக்கு வந்துள்ளது.
அஸ்வினை ஏன் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கவில்லை? யார் இந்த முடிவினை எடுத்தது? அஸ்வின் இல்லாததால் இந்திய அணி தோற்கப்போகிறது, அவரை அணியில் எடுக்காததால் அதற்கான பலனையும் அனுபவிக்கப்போகிறது பாருங்கள் என கூறியிருந்தார்.
அவர் சொன்னபடியே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.