சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ
இந்தியா - நார்த்தம்டன்ஷைர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் போட்டி தொடர்பிலான ஒரு வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் இந்திய அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரி 1 சிக்சர் என 34 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது பிரெட்டி ஹெல்ட்ரீச் வீசிய பந்தை சிக்சருக்கு பறக்கவிட நினைத்த தினேஷ் கார்த்திக் வேகமாக அடித்தார்.
Unbelievable. ? https://t.co/bF0wtcRVUR pic.twitter.com/0iKNBSlTUe
— Northamptonshire CCC (@NorthantsCCC) July 3, 2022
பந்தானது பவுண்டரி லைனுக்கு அருகே நின்றிருந்த வாஸ்கோன்சிலோஸ் அருகே சென்ற நிலையில் அவர் விழுந்து புரண்டு பந்தை பிடித்து தினேஷ் கார்த்திக்கை அவுட்டாக்கினார்.
இதையடுத்து ஏமாற்றாத்துடன் தினேஷ் கார்த்திக் பெவிலியன் திரும்பினார்.