அப்ரிடி என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார் - முன்னாள் கிரிக்கெட் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
அப்ரிடி என்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
டேனிஷ் கனேரியா
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்களே இருப்பார்கள்.
இதுவரை பிற மதத்தை சேர்ந்த 7 பேர் மட்டுமே, பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளார்கள். அதில் அனில் தல்பத்திற்கு அடுத்து, பாகிஸ்தான் அணியில் விளையாடிய 2வது பிற மதத்தவர் டேனிஷ் கனேரியா ஆவார்.
2000 ஆம் ஆண்டு முதல் 2010 வரை பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேனிஷ் கனேரியா, 261 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2012 ஆம் ஆண்டு, இவர் Spot Fixing-இல் ஈடுபட்டதாக கூறி, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
மதமாற்ற கட்டாயப்படுத்தல்
இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் சிறுபான்மையினரின் அவலநிலை குறித்து நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பேசிய டேனிஷ் கனேரியா, தனக்கு நேர்ந்த அவலங்கள் குறித்து பேசியுள்ளார்.
இதில் பேசிய அவர், "நான் இந்து என்பதால், பாகிஸ்தான் அணியில் மதத்தின் அடிப்படையில் பாகுபாடுகளை எதிர்கொண்டேன். இதனால், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை அழிக்கப்பட்டு விட்டது.
எனக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும், சமமான மதிப்பும் பாகிஸ்தானில் கிடைக்கவில்லை. இந்தப் பாகுபாட்டின் காரணமாக, இன்று அமெரிக்காவில் இருக்கிறேன்.
பாகிஸ்தான் வீரர்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். ஷாஹித் அஃப்ரிடி உள்பட மற்ற வீரர்கள் என்னை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.
ஆனால், இன்ஜமாம் உல் ஹக் மற்றும் சோயிப் அக்தர் அதுபோன்று என்னிடம் நடந்து கொண்டதில்லை" என பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |