முகமது ஷமி நோன்பு சர்ச்சை - பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் வழங்கிய அறிவுரை
முகமது ஷமி நோன்பு கடைபிடிக்காததாக எழுந்த விடயத்தில் இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஷமி நோன்பு சர்ச்சை
இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் என்பது மிகவும் முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதத்தில் அவர்கள் நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி வீரர் முகமது ஷமி நோன்பு கடைபிடிக்காமல் நீர் அருந்தியதாக சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரத்தில் ஷமிக்கு பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இன்சமாம் உல் ஹக் விளக்கம்
இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் இன்சமாம்-உல்-ஹக், "ஷமி பொதுவில் நீர் அருந்தியதற்கு தான் எதிர்ப்பு எழுந்துள்ளது. திரைமறைவில் செய்திருந்தால் பிரச்சினை இல்லை.
நானும் இதை எதிர்கொண்டுள்ளேன். விளையாட்டின் போது நோன்பை கைவிடுவது பெரிய விடயம் இல்லை. விளையாட்டின் போது நோன்பை கடைப்பிடிப்பது கடினம்.
பாகிஸ்தான் வீரர்கள் போட்டியின் போது திரைமறைவிற்கு சென்று தண்ணீர் அருந்திக் கொள்வோம். ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக நோன்பு கைவிடவோ, கடைப்பிடிக்கவோ கூடாது. சுற்றுப்பயணத்தில் உள்ளபோது நோன்பை கைவிட அனுமதி உள்ளது" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |